குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச், பரிபடாவில் "பிரதமரின் விஸ்வகர்மா- தேசிய ஷெட்யூல்டு மற்றும் பழங்குடியின மையம்"குறித்த மாநாடு

Posted On: 16 APR 2025 5:53PM by PIB Chennai

மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை  அமைச்சகம், ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச், பாரிபடாவில் உள்ள மகாராஜா ஸ்ரீராம் சந்திர பஞ்சா தியோ பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 2025  ஏப்ரல் 16-ம் தேதி  'பிரதமரின் விஸ்வகர்மா – தேசிய ஷெட்யூல்டு மற்றும் பழங்குடியின மையம்' குறித்த மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கண்காட்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பிரதமரின் விஸ்கர்மா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் அரசு அதிகாரிகளை ஒன்றிணைத்து தேசிய ஷெட்யூல்டு, பழங்குடியின மையம்  மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை முன்னிலைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டை மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள்  அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி, ஒடிசா மாநில முதல்வர் திரு மோகன் சரண் மாஜி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2122168

----

TS/SV/KPG/DL


(Release ID: 2122212)
Read this release in: English , Urdu , Hindi