பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மேகயான்-25 என்ற பெயரில் வானிலை மற்றும் கடலியல் கருத்தரங்கு - இந்தியக் கடற்படை நடத்தியது

Posted On: 16 APR 2025 5:55PM by PIB Chennai

இந்தியக் கடற்படை சார்பில் வானிலை மற்றும் கடலியல் கருத்தரங்கின் 3-வது பதிப்பான மேகயான்-25 தில்லியில் 2025 ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது. கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி காணொலி மூலம் இதனைத் தொடங்கி வைத்தார். இதில் புகழ்பெற்ற கடலியல் நிபுணர்கள், கடற்படை அதிகாரிகள், வானிலை ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வானிலை ஆய்வு மையம், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம், இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம், தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம், இந்திய விமானப்படை, விண்வெளி பயன்பாட்டு மையம், தேசிய கடல்சார் அறக்கட்டளை, சென்னை ஐஐடி போன்ற முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள்  பங்கேற்றனர்.

இரண்டு அமர்வுகளாக இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது. கடல் வானிலை, கடலியல் ஆகியவற்றில் அதிநவீன முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் விதமாக முதல் அமர்வு அமைந்திருந்தது. வானிலை முன்னறிவிப்பில் புள்ளியியல் அணுகுமுறை என்ற தலைப்பில் நடைபெற்ற 2-வது அமர்வில் விவாதங்கள் இடம்பெற்றன. இரண்டு அமர்வுகளும் பங்கேற்பாளர்களின் தீவிர பங்கேற்புடன் உற்சாகமான கேள்வி பதில், அமர்வுகளுடன் நிறைவடைந்தன.

***

(Release ID: 2122172)

TS/PLM/AG/DL


(Release ID: 2122195) Visitor Counter : 40
Read this release in: English , Urdu , Marathi , Hindi