அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தங்களது முக்கியதத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்க தொழில்களுக்கு அதிகாரம் அளிக்கும் தளத்தை உருவாக்குகிறது
Posted On:
14 APR 2025 5:58PM by PIB Chennai
தேசிய குவாண்டம் இயக்கத்தின் கீழ் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் ஒன்றான கியூஎன்யு லேப்ஸ், உலகின் முதலாவது மற்றும் தனித்துவமான தளமான கியூ ஷீல்டு-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இன்று உலக குவாண்டம் தினத்தை முன்னிட்டு கிளவுட், நேரடியாகவோ அல்லது கலப்பின முறை என எந்த சூழலிலும் தடையற்ற கிரிப்டோகிராஃபி மேலாண் நடவடிக்கையை செயல்படுத்துகிறது.
கியூ ஷீல்டு நிறுவனங்கள் தங்களது முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்க அதிகாரம் அளிக்கிறது - கியூஎன்யு லேப்ஸ் - ன் காப்புரிமை பெற்ற குவாண்டம் கீ விநியோகம், குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேட்டர், குவாண்டம் வன்பொருள் பாதுகாப்பு தொகுதி மற்றும் என்ஐஎஸ்டி - போன்ற இணக்கமான குவாண்டம் கிரிப்டோகிராஃபி செயல்பாடுகளுக்குப் பிறகு, கியூ ஷீல்டு கவசம் முக்கியமான தரவுகளைப் பாதுகாப்பதற்கான இறுதி தீர்வை வழங்குகிறது.
இந்த தளத்தின் அறிமுகம் குவாண்டம் தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியாவை முன்னோடி நாடாக உருவெடுக்கச் செய்வதற்கான பயணத்தில் மேலும் ஒரு நிலையை எட்டியுள்ளது.
இந்த தொழில்நுட்பம் கியூ ஷீல்டு போன்ற பல்வேறு சேவைகளை செயல்படுத்துகிறது. தொழில்நுட்ப இணைப்பு, கோப்புக்களை பாதுகாப்பது, தரவுகளை சேகரிப்பது மற்றும் பகிர்ந்து கொள்வது என பல்வேறு முக்கிய தொழில்நுட்ப மேலாண்மைக்கான நடவடிக்கைகளுக்கும், நிறுவனங்களுக்கு அதன் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மாறுபட்ட உள்கட்டமைப்புகளுக்கான வழிவகைகளை மேம்படுத்துகிறது.
2016 - ம் ஆண்டில் சென்னை, இந்தியத் தொழில்நுட்பக் கழக வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி பூங்காவில் நிறுவப்பட்ட கியூஎன்யு லேப்ஸ், குவாண்டம் - தொழில்நுட்பப் பாதுகாப்பிற்குத் தேவையான தீர்வுகளுடன் சைபர் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துகிறது. குவாண்டம் கிரிப்டோகிராஃபி தொழில்நுட்பத்தில் இந்தியாவை உலகளாவில் முன்னணி நாடாக நிலைநிறுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121617
**
TS/SV/KPG/DL
(Release ID: 2121909)
Visitor Counter : 9