நிதி அமைச்சகம்
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடமிருந்து ரூ.75.6 கோடி மதிப்புள்ள 7.56 கிலோ கோகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது
Posted On:
15 APR 2025 4:50PM by PIB Chennai
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக குறிப்பிட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) 14.04.2024 அன்று துபாயிலிருந்து புதுதில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த ஒரு இந்தியப் பயணியை சோதனைக்கு உட்படுத்தியது.
பயணியின் சாமான்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, ஐந்து காலி கைப்பைகள் / பணப்பைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த 5 பைகளின் உட்புற அடுக்குகளை பிரித்து பார்த்தபோது, 7.56 கிலோ எடையுள்ள 10 பாக்கெட் வெள்ளை நிற போதைப்பவுடர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிபட்ட அந்த நபர் போதைப்பொருள் மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் (என்.டி.பி.எஸ்) சட்டம், 1985-ன் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது..
***
(Release ID: 2121865)
TS/IR/RR/KR
(Release ID: 2121884)