எரிசக்தி அமைச்சகம்
2024-25 ஆம் ஆண்டில் சாதனை எண்ணிக்கையில் நீர் மேலேற்றம் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகளுக்கு மத்திய மின்சார ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
12 APR 2025 2:18PM by PIB Chennai
மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மின்சார ஆணையம் , 2024-25-ம் ஆண்டில் சாதனை அளவாக சுமார் 7.5 ஜிகாவாட் திறன் கொண்ட 6 நீர் மேலேற்றம் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்களின் விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேம்பட்ட நீண்ட கால எரிசக்தி சேமிப்பு தீர்வுகளை உருவாக்குவதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லை இது குறிக்கிறது.
மேலும், 2025-26-ம் ஆண்டில் சுமார் 22 ஜிகாவாட் திறன் கொண்ட குறைந்தபட்சம் 13 மேலேற்றம் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்களை ஒருங்கிணைக்க மத்திய மின்சார ஆணையம் லட்சியத் திட்டத்தை வகுத்துள்ளது. இந்த மேலேற்றம் செய்யப்பட்ட சேமிப்பு திட்டங்களில் பெரும்பாலானவை 4 ஆண்டுகளில், இறுதியாக 2030-ம் ஆண்டிற்குள் செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களின் வளர்ச்சி நாட்டில் எரிசக்தி சேமிப்புத் திறனை வெகுவாக அதிகரிக்கும். இது மின்தொகுப்பு நம்பகத்தன்மைக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்; இந்தியாவின் லட்சிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை ஆதரிக்கும். இது மிகவும் நிலையான மற்றும் மீள்தன்மை கொண்ட மின் அமைப்பை நோக்கிய மாற்றத்தை எளிதாக்குவதற்கான மத்திய மின்சார ஆணையத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
தற்போது 10 ஜிகாவாட் திறன் கொண்ட 8 திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளன, மேலும் சுமார் 3 ஜிகாவாட் திறன் கொண்ட 3 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 66 ஜிகாவாட் திறன் கொண்ட 49 திட்டங்கள் ஆய்வு மற்றும் விசாரணையில் உள்ளன. அனைத்து விரிவான திட்ட அறிக்கைகளும் 2 ஆண்டுகளில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121181
****
SMB/DL
(Release ID: 2121227)
Visitor Counter : 26