பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
வடகிழக்கு இந்தியாவின் முழுமையான வளர்ச்சிக்கு மத்திய அரசின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வலியுறுத்தினார்
प्रविष्टि तिथि:
11 APR 2025 5:40PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசத்தின் கிரா தாடி மாவட்டத்திற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி வெள்ளிக்கிழமை அரசு முறை பயணம் மேற்கொண்டார், அங்கு அவர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சமூக கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், உள்ளூர் கலைஞர்களால் ஊட்டச்சத்து திட்டம் குறித்த கருப்பொருளில் வசீகரிக்கும் நாடகம் மற்றும் பாரம்பரிய பாடல்கள் நிகழ்த்தப்பட்டதுடன், உள்ளூர் சமூகத்தினரால் மத்திய அமைச்சருக்கு அன்பான மற்றும் துடிப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊட்டச்சத்து இருவார விழாவின் 7-வது பதிப்பில் உரையாற்றிய திருமதி அன்னபூர்ணா தேவி, அரசின் வழிகாட்டும் கொள்கையான "அனைவரின் நம்பிக்கை மற்றும் முயற்சிகளுடன் அனைவரும் இணைவோம், அனைவரும் வளர்வோம்" என்ற அரசின் வழிகாட்டும் கொள்கையை எதிரொலித்து, நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தின் ஒவ்வொரு மூலையிலும் வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் அசைக்க முடியாத தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். "தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், அனைத்து முன்னேற விரும்பும் மாவட்டங்களிலும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, சுகாதாரம் மற்றும் குடும்ப நலனை மேம்படுத்த சிறப்பு முயற்சிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது" என்று அவர் கூறினார்.
பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், குழந்தைகள் நலனை மேம்படுத்துதல் மற்றும் அனைத்து பிராந்தியங்களிலும், குறிப்பாக உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் கலாச்சார ரீதியாக வளமான வடகிழக்கு மாநிலங்களில் சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் கிரா தாடிக்கு மேற்கொண்ட பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2121016
****
(Release ID: 2121016)
RB/DL
(रिलीज़ आईडी: 2121117)
आगंतुक पटल : 28