வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் - இத்தாலி வெளியுறவு அமைச்சர் திரு அன்டோனியோ தஜானி சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
11 APR 2025 5:11PM by PIB Chennai
இந்தியா – இத்தாலி இடையே இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக அந்நாட்டு துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான திரு அந்தோனியோ தஜானி, மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலை இன்று சந்தித்துப் பேசினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுபபடுத்துதல் குறித்து இருவரும் விவாதித்தனர். ஜனநாயகம் மற்றும் நடுநிலைமை யின் அடிப்படையில் அமைந்த நீண்ட கால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதென இருதலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருநாட்டு பிரதமர்கள் இடையேயான சந்திப்பின் போது முடிவு செய்யப்பட்ட செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் குறித்து இவ்விரு தலைவர்களும் விவாதித்தனர். வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் குறித்தும் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது. 2023-2024-ம் ஆண்டில் இரு நாடுகளிடையேயான வர்த்தகம் 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு அந்நிய நேரடி முதலீடுகள் 2000-மாவது ஆண்டிலிருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என மதிப்பிடப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப வளம் மற்றும் வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்துவதையும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் இரு நாடுகளின் வசதிக்கு ஏற்ப இத்தாலியில் நடத்துவது என்றும், இருதரப்பு வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு ஏதுவாக சந்தை வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளைச் சேர்ந்த உயர்நிலைக் குழுக்களுடன் ஆலோசனை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120975
***
TS/SV/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2121028)
வருகையாளர் எண்ணிக்கை : 96