ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியப் பட்டின் மாயாஜாலம்

Posted On: 11 APR 2025 1:16PM by PIB Chennai

இந்தியாவின் வரலாறு, பாரம்பரியம் கலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு நூலாக பட்டு திகழ்கிறது. காஞ்சிபுரம் புடவைகளின் செழிப்பு, பிரகாசமான வண்ணங்கள் முதல் பாகல்பூர் துசரின் அழகு வரை, ஒவ்வொரு பட்டுப் புடவையும் ஒரு கதையைச் சொல்கிறது. அவை தூய மல்பெரி பட்டிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கைவினைஞர்களால் கவனமாகவும் திறமையாகவும் நெய்யப்படுகின்றன. இந்தக் கைவினை தலைமுறை தலைமுறைகளாக உயிர்ப்புடன் திகழ்கிறது. தறி அவர்களின் கைகளின் தாளத்துடன் ரீங்காரமிடும்போது, பட்டுப் புடவை உயிர் பெறுகிறது. வெறும் ஆடையாக மட்டுமல்லாமல், பட்டுக் கலையால் ஒன்றிணைக்கப்பட்ட இந்தியாவின் பன்முக மற்றும் துடிப்பான ஆன்மாவின் அடையாளமாக அது உருவெடுக்கிறது.

 

பட்டுப்புழு வளர்ப்பு என்பது பட்டு தயாரிப்பதற்காக பட்டுப்புழுக்களை வளர்ப்பதாகும்  மல்பெரி, ஓக், ஆமணக்கு மற்றும் அர்ஜுன் இலைகளில் பட்டுப்புழுக்கள் வளர்க்கப்படுகின்றன. சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு, அவர்கள் பட்டுக்கூடுகளை நூற்கிறார்கள். பட்டுக்கூடுகள் சேகரிக்கப்பட்டு மென்மையாக்குவதற்காக வேகவைக்கப்படுகின்றன. பட்டு நூல்கள் பின்னர் வெளியே இழுக்கப்பட்டு, நூலாகத் திரிக்கப்பட்டு, துணியாக நெய்யப்படுகின்றன. இந்தக் கவனமான செயல்முறை சிறிய பட்டுப்புழுக்களை பளபளப்பான பட்டாக மாற்றுகிறது.

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பட்டு உற்பத்தி நாடாகவும், மிகப்பெரிய பட்டு நுகர்வு நாடாகவும் உள்ளது. இந்தியாவில், மல்பரி பட்டு முக்கியமாக கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, ஜம்மு & காஷ்மீர், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மல்பெரி அல்லாத பட்டு ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

பட்டு அதிக மதிப்புள்ளது,  ஆனால் குறைந்த அளவில் உற்பத்தி ஆகும் பொருளாகும். இது உலகின் மொத்த ஜவுளி உற்பத்தியில் 0.2% மட்டுமே ஆகும். பட்டு உற்பத்தி பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுகிறது. வளரும் நாடுகள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும்,  அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும் இதை நம்பியுள்ளன.

இந்தியாவில் பட்டுத் தொழிலின் வளர்ச்சியில் அரசின் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த முயற்சிகள் பட்டு வளர்ப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி மற்றும் வளங்களை வழங்குகின்றன:

இந்தியா முழுவதும் பட்டு வளர்ப்புத் துறையை மேம்படுத்த அரசு எடுத்துள்ள முக்கியமான முயற்சியே  பட்டு ஒருங்கிணைப்புத் திட்டம். பட்டுப்புழு வளர்ப்பின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதும், நலிவடைந்த, ஏழை மற்றும் பின்தங்கிய குடும்பங்களுக்கு அதிகாரம் அளிப்பதும் இதன் நோக்கமாகும். இத்திட்டம் நான்கு  முக்கிய கூறுகளை உள்ளடக்கியது.

2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் ரூ.4,679.85 கோடி பட்ஜெட்டில் இந்த முயற்சியின் விரிவாக்கமாக

சில்க் சமக்ரா-2  திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பட்டுப்புழுக்களை வளர்த்தல் முதல் தரமான பட்டுத் துணிகளை உற்பத்தி செய்வது வரையிலான ஒட்டுமொத்த பட்டு உற்பத்தி செயல்முறையை மேம்படுத்த இத்திட்டங்கள் உதவுகின்றன.

இத்திட்டங்கள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சாப்பட்டின் அளவு மற்றும் தரத்தினை மேம்படுத்தி, இந்தியாவில் பட்டுத் தொழிலின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.

பட்டு ஒருங்கிணைப்பு(சில்க் சமக்ரா) மற்றும் பட்டு ஒருங்கிணைப்பு-2(சில்க் சமக்ரா-2) போன்ற திட்டங்களின் உதவியுடன் இந்தியாவின் பட்டுத் தொழில் நன்கு வளர்ந்துள்ளது. இவை விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஆதரவளித்துள்ளன. பயிற்சி, புதிய சிந்தனைகள், சிறந்த சந்தைகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம், பட்டுத் துறையில் இந்தியா உலகிலேயே முன்னணி நாடாக மாற முடியும். இது நமது பட்டுப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120877    

***

TS/PKV/RR/RJ


(Release ID: 2120911) Visitor Counter : 41