நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஏப்ரல் 2025-நிதிக் கொள்கை அண்மைத் தகவல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 09 APR 2025 6:14PM by PIB Chennai

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும். 2025-26-ம்  நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி  6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் 54-வது கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டின் முதல் கூட்டத்தில் வட்டிவிகித கொள்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டிற்கான முதலாவது கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இந்த நிதிக்கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.  ரெப்போ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியால் வர்த்தக வங்கிகளுக்கு  கடன் வழங்கும் விகிதமாகும். மேலும் இந்த விகிதத்தை குறைப்பது என்பது கடன் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகளாவிய பொருளாதாரச் சூழலில் நிச்சயமற்றதன்மை நீடித்து வருவதன் காரணமாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவது, பங்கு பரிவர்த்தனைகளின் சூழல், ஆகியவற்றை கருத்தில் கொண்டு உலகெங்கிலும் உள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் உள்நாட்டு  பொருளாதார சூழலை மேம்படுத்தும் வகையில் நிதிசார் கொள்கைகளை வெளியிட்டு வருகின்றன. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2120509

 

***

TS/SV/AG/DL


(रिलीज़ आईडी: 2120540) आगंतुक पटल : 139
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Malayalam , Urdu , हिन्दी , Bengali , Odia