உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
ஏர்பஸ் மற்றும் மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனங்களுக்கிடையே உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம்
Posted On:
09 APR 2025 5:03PM by PIB Chennai
ஏர்பஸ் மற்றும் மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனங்களுக்கிடையே எச்130 ரக ஹெலிகாப்டர் பாகங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு முன்னிலையில் இன்று கையெழுத்தானது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அத்துறைச் செயலாளர் திரு வும்லுன்மங் வுல்னம், ஏர்பஸ் நிறுவுனத்தின் இந்தியா, தெற்காசியப் பகுதிகளுக்கான வர்த்தகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ரெமி மெயிலார்ட், மஹிந்திரா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அனிஷ் ஷா மற்றும் தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்த ஒப்பந்தம் நாட்டின் பயணியர் விமானப்போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை உறுதி செய்கிறது. இது நாட்டின் தொழில்துறை திறன் மீதான உலகளாவிய நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன் மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் வகை செய்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்தியாவில் உற்பத்தி செய்வோம் மற்றும் தற்சார்பு இந்தியா முயற்சிகளுக்கான உறுதியான நடவடிக்கைகளை இது எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு, ஹெச்130 ரக ஹெலிகாப்டருக்கான பாகங்களை உற்பத்தி செய்வதற்கான இந்த ஒப்பந்தம் ஏர்பஸ் போன்ற சர்வதேச நிறுவனங்கள் இந்தியத் தொழில்துறையின் திறன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சான்றாக அமைந்துள்ளது என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120439
------
TS/SV/KPG/RR/DL
(Release ID: 2120528)