பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2022-23-ம் நிதியாண்டிற்கான முதலாவது பஞ்சாயத்து முன்னேற்றம் தொடர்பான குறியீட்டு எண் அறிக்கையை வெளியிடுவதன் மூலம் ஆதாரங்கள் அடிப்படையிலான கிராமப்புற வளர்ச்சி உத்வேகம் பெறுகிறது

Posted On: 09 APR 2025 1:43PM by PIB Chennai

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர்மயமாக்குதல், அதிகாரப் பரவலாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு  கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பஞ்சாயத்து அமைச்சகமானது உள்ளாட்சி அமைப்புகளின் முன்னேற்றம் தொடர்பான குறியீட்டு எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாடு முழுவதும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான கருவியாகும். நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட உள்ளூர்மயப்படுத்தப்பட்ட நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளின்  9 அம்சங்களில்  பஞ்சாயத்து அமைப்புகளின் செயல்திறனை பஞ்சாயத்து முன்னேற்ற குறியீட்டு எண் எடுத்துக் காட்டுகிறது.  பஞ்சாயத்துகளில் வறுமை இன்மை மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள்; ஆரோக்கியமான பஞ்சாயத்து ; குழந்தைகளுக்கு உகந்த பஞ்சாயத்து; போதுமான நீர் வளம் கொண்ட பஞ்சாயத்து; தூய்மை மற்றும் பசுமை பஞ்சாயத்து; சுய-சார்புக்கான  உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட பஞ்சாயத்து; தன்னிறைவு, சமூக நீதியும் சமூக பாதுகாப்பும் கொண்ட பஞ்சாயத்து; சிறந்த ஆளுகை உள்ள பஞ்சாயத்து மற்றும் பெண்களுக்கு நட்புறவான பஞ்சாயத்து ஆகிய ஒன்பது அம்சங்களில் பஞ்சாயத்துகள் மதிப்பிடப்பட்டு உள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மத்திய மாநில அரசுகளுக்கு செயல் திட்டங்களை வகுப்பதில் உதவுகின்றன. நான்கு பிரிவுகளாக பஞ்சாயத்துகள் குறியீட்டு எண் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. முன்னேறிச் சென்ற முன்னணி பஞ்சாயத்துகள், முன்னேறிய பஞ்சாயத்துகள், முன்னேறத் துடிக்கும் பஞ்சாயத்துகள் மற்றும் முன்னேற்றத்தின் முதல்படி பஞ்சாயத்து கள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

மாநில வாரியாக, குஜராத் 346 முன்னேறிச் சென்ற கிராம பஞ்சாயத்துகளுடன் முன்னணியில் உள்ளது. அதைத் தொடர்ந்து தெலுங்கானா 270 பஞ்சாயத்துகளுடன் உள்ளது. அதிக எண்ணிக்கையிலான  முன்னேறிய பஞ்சாயத்துகளைக்கொண்ட மாநிலங்களில் குஜராத் (13781), மகாராஷ்டிரா (12,242), தெலுங்கானா (10099), மத்தியப் பிரதேசம் (7,912), மற்றும் உத்தரபிரதேசம் (6593) ஆகியவை தரவரிசையில் மேல் நிலையில் உள்ளன. அதே நேரத்தில் பீகார், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை முன்னேறத் துடிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. நாட்டில் உள்ள 2,55,699 கிராம பஞ்சாயத்துகளில், 2,16,285 பஞ்சாயத்துகள் சரிபார்க்கப்பட்ட தரவை சமர்ப்பித்துள்ளன என்று 2022-23 பி.ஏ.ஐ. தரவு வெளிப்படுத்துகிறது. 699 (0.3%) பஞ்சாயத்துகள் முன்னேறிச் சென்ற பிரிவில் இருக்கின்றன; 77,298 (35.8%) முன்னேறிய பஞ்சாயத்துகள் பிரிவிலும் 1,32,392 (61.2%) பஞ்சாயத்துகள் முன்னேறத் துடிக்கும் பிரிவிலும் 5,896 (2.7%) கிராம பஞ்சாயத்துகள் முன்னேற்றத்தின் முதல் படி பிரிவிலும்ஜஇருக்கின்றன. கிராம பஞ்சாயத்து எதுவும் சிறப்பு சாதனையாளராக தகுதி பெறவில்லை. இதுவரை, மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பீடு எதுவும் செய்யப்படவில்லை.

பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீட்டு எண் என்பது பஞ்சாயத்து அமைப்புகளின் ஒட்டுமொத்த முழுமையான வளர்ச்சி, செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் பல்வேறு கள மற்றும் பல்துறை குறியீடு ஆகும். பஞ்சாயத்து அதிகார எல்லைக்குள் உள்ள உள்ளூர் சமூகங்களின் நல்வாழ்வு மற்றும் வளர்ச்சி நிலையை அளவிடுவதற்கு பல்வேறு சமூக-பொருளாதார குறியீடுகள் மற்றும் அளவுருக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

பல்வேறு மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகளின் ஒத்துழைப்பு காரணமாக பஞ்சாயத்து முன்னேற்றக் குறியீட்டை வெளியிடுவது சாத்தியமாகியுள்ளது. இது வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கான கருவியாக அமைகிறது. 29 மாநிலங்கள்  யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 2.16 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகள் ஏற்கனவே தங்களது தரவுகளை பிரத்யேக பஞ்சாயத்து குறியீட்டிற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. இந்த இணையதளம் (www.pai.gov.in) ஒரு வலுவான, பன்மொழித் தரவு மேலாண்மை தளமாக செயல்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2120320  

-----

TS/SV/KPG/RR


(Release ID: 2120400) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi , Gujarati