மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் யுனெஸ்கோ இணைந்து 3 வது செயற்கை நுண்ணறிவு தயார்நிலை ஆலோசனையை ஹைதராபாத்தில் நடத்த உள்ளன
Posted On:
07 APR 2025 2:33PM by PIB Chennai
தெற்காசியாவிற்கான யுனெஸ்கோ பிராந்திய அலுவலகம், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியன செயல்படுத்தும் பங்குதாரராக இகிகாய் சட்டம் அமைப்புடன் இணைந்து இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தயார்நிலை மதிப்பீட்டு முறை குறித்த ஆலோசனையை ஏற்பாடு செய்துள்ளன. இந்த நிகழ்வு நாளை (2025 ஏப்ரல் 8 ) மதியம் 1:30 மணிக்கு, ஹைதராபாத்தில் உள்ள டி-வொர்க்ஸில் நடைபெறும்.
இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் குறித்த விவாதம் இருக்கும். இதில் இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. அபிஷேக் சிங் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக கூடுதல் செயலாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் "செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் நெறிமுறைகளை வடிவமைத்தல்: அரசு மற்றும் பன்னோக்கு கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில் ஒரு குழு விவாதமும் நடைபெறும். மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம், அமிர்தா பல்கலைக்கழகம், யுனெஸ்கோ மற்றும் தெலங்கானா அரசின் பிரதிநிதிகளாக உயர் அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்கின்றனர். இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு தயார்நிலையின் முக்கிய பரிமாணங்களில் ஆழமான உரையாடல் மற்றும் உள்ளீட்டை எளிதாக்கும்.
***
(Release ID: 2119746)
TS/IR/RR/KR
(Release ID: 2119760)
Visitor Counter : 23