புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
தேசிய மாதிரி கணக்கெடுப்புகள் குறித்த 18வது தேசிய கருத்தரங்கு: “ அண்மை கணக்கெடுப்பு முடிவுகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் போக்குகள் மூலம் கிடைக்கும் அறிவு நுட்பங்கள் ”
Posted On:
07 APR 2025 9:12AM by PIB Chennai
தேசிய மாதிரி கணக்கெடுப்புகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணக்கெடுப்பு அறிக்கைகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், வழக்கமான இடைவெளியில் தேசிய கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கணக்கெடுப்பு முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை முன்வைத்து விவாதிக்கும் தளமாக இந்தக் கருத்தரங்குகள் செயல்படுகின்றன. இதுவரை, நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பதினேழு (17) தேசிய கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன. இந்த மரபைத் தொடர்ந்து, தேசிய மாதிரி கணக்கெடுப்பு முடிவுகள் குறித்த 18வது தேசிய கருத்தரங்கு 2025 ஏப்ரல் 8, 9 ஆகிய தேதிகளில் கோவாவின் பனாஜியில் உள்ள கோவா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கருத்தரங்கை தேசிய மாதிரி கணக்கெடுப்பு தலைமை இயக்குநர் தொடங்கி வைக்கிறார்.கோவா பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கணக்கெடுப்புக்கான படிவங்கள் மற்றும் நடைமுறைகளை இறுதி செய்ய வழிகாட்டிய பல்வேறு நிபுணர் குழுக்களின் புகழ்பெற்ற உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு விவாதங்களில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்வில் ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் உட்பட 225 பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். சர்வதேச அமைப்புகளின் நிபுணர்கள், தனியார் கணக்கெடுப்பு நிறுவனங்களின் நிபுணர்கள் மற்றும் புகழ்பெற்ற நிறுவனங்களின் பேராசிரியர்கள்/அறிஞர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள்.
ஆய்வுக் கட்டுரைத் தேர்வுக் குழுவின் முழுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து, 14 ஆய்வுக் கட்டுரைகள் கருத்தரங்கில் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கருத்தரங்கில் ஐந்து தொழில்நுட்ப அமர்வுகள் இருக்கும்.
முக்கியமான தலைப்புகளில் தகவலறிந்த விவாதங்கள், கொள்கை பரிந்துரைகள் மற்றும் தரவு சார்ந்த நுண்ணறிவுகளை எளிதாக்குவதையும், சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத்திற்கு பங்களிப்பதையும் இந்த கருத்தரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
பங்கேற்பாளர்கள் திறந்த பதிவு மூலம் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வில் சேர ஊக்குவிக்கப்படுகிறார்கள். பதிவு இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSea7ooVF5HGOs0__FRZ6KmPE1wcMCIgWAu2EDtcIbALXPomvQ/viewform?usp=header நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள், இந்த நிகழ்வை https://www.youtube.com/@GoIStats என்ற அமைச்சகத்தின் யூடியூபில் நேரடியாக ஒளிபரப்பில் பார்க்கலாம்.
தேசிய மாதிரி கணக்கெடுப்பு மற்றும் அறிக்கைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.mospi.gov.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.
***
(Release ID: 2119640)
TS/SMB/RR/KR
(Release ID: 2119688)
Visitor Counter : 28