பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஸ்டார்ட் அப் மகா கும்பமேளாவில் ஜொலித்த பழங்குடியினரின் புத்தொழில் நிறுவனங்கள்

Posted On: 06 APR 2025 9:09AM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மகாகும்பமேளாவில் இந்தியா முழுவதிலும் இருந்து பழங்குடியினர் தலைமையிலான 45 புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. இதன் மூலம் பழங்குடியின தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதில் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடையாளப்படுத்தியது. பழங்குடியினர் கௌரவ ஆண்டின் ஒரு பகுதியாக 'தர்தி ஆப் பழங்குடியினர் தொழில் முனைவோர்' என்ற முதன்மை முன்முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, நவீன தொழில்நுட்பம் முதல் இயற்கை வேளாண்மை வரையிலான துறைகளில் புதுமைகளைக் கண்டது.

ஐஐஎம் கொல்கத்தா, ஐஐடி குவஹாத்தி ஆகிய முதன்மை நிறுவனங்களில் வழிகாட்டப்பட்ட இரண்டு பழங்குடியினர் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்கள், இந்தியாவின் பழங்குடியின சூழல் அமைப்பில் தொழில்முனைவோரின் வளர்ந்து வரும் பங்கை உறுதிப்படுத்தி, மத்திய வர்த்தக  தொழில்துறை அமைச்சர் ஸ்ரீ பியூஷ் கோயலிடமிருந்து மதிப்புமிக்க தேசிய அங்கீகாரத்தைப் பெற்றன.

இந்த சாதனைக்குமத்திய பழங்குடியினர் விவகார அமைச்சர் திரு ஜுவல் ஓரம் வாழ்த்துத் தெரிவித்தார்இந்தியாவின் மிகப்பெரிய புத்தொழில் மாநாட்டில் பழங்குடியின தொழில்முனைவோரின் வருகை, அங்கீகாரம், ஆகியவை நாட்டின் வளர்ச்சிக் கதையில் பழங்குடியினரை முக்கிய பங்குதாரராக மாற்றுவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறது.

***

(Release ID: 2119444)

PLM/ RJ

 


(Release ID: 2119520) Visitor Counter : 26