சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புற்றுநோயைக் கண்டறிவதற்கும் தடுப்பதற்குமான அரசின் நடவடிக்கைகள்

Posted On: 04 APR 2025 4:00PM by PIB Chennai

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை , தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய திட்டத்தின் மூலம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவியை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மொத்தம் 770 மாவட்ட தொற்றா நோய் மருத்துவமனைகள், 233 இருதய நோய் சிகிச்சை மையங்கள், 372 மாவட்ட பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களில் 6,410 தொற்றா நோய் மருத்துவப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன.

மூன்றாம் நிலை புற்றுநோய் பராமரிப்பு வசதிகளை வலுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக பல்வேறு மண்டலங்களில் 19 மாநில புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள், 20 மூன்றாம் நிலை புற்றுநோய் பராமரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை வசதிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவை நோயறிதல், மருத்துவம், அறுவை சிகிச்சை திறன்களைக் கொண்டுள்ளன. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜாரில் உள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை நிறுவனம் 1,460 நோயாளி பராமரிப்பு படுக்கைகள் மற்றும் மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளைக் கொண்டுள்ளது. இதே போல் 460 படுக்கைகளைக் கொண்ட கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் ஆகியவை சூப்பர்-ஸ்பெஷாலிட்டி சிகிச்சையை வழங்குகின்றன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த  பதிலில்  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118795

****

TS/GK/KPG/DL


(Release ID: 2118997) Visitor Counter : 26
Read this release in: English , Urdu , Hindi