அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

துலிப் மலர்கள் இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவன விஞ்ஞானிகள் நடவடிக்கை

Posted On: 04 APR 2025 3:20PM by PIB Chennai

காஷ்மீரின் துலிப் தோட்டங்களின் அழகு நீண்ட காலமாகச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக இருந்து வருகிறது, ஸ்ரீநகரில் உள்ள இந்தத் தோட்டம் ஆண்டுதோறும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.  துலிப் மலர் வளர்ப்பை ஊக்குவித்து விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் குழுமத்தின் முதன்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான ஜம்முவில் உள்ள இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனம், புதிய கண்டுபிடிப்பு மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது. உயர் மதிப்புள்ள துலிப் மலர் பயிர்களின் தரமான நடவுப் பொருளை உருவாக்குதல், மலர் வளர்ப்பின் கீழ் பரப்பளவு விரிவாக்கம், நகர்ப்புற மலர் வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்தைய பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டல், தேனீ வளர்ப்புடன் மலர் வளர்ப்பை ஒருங்கிணைத்தல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

இந்த நிறுவனம் 2022-ம் ஆண்டில் அதன் போனேரா நிலையத்தில் துலிப் மலர் சாகுபடியைத் தொடங்கியுள்ளது. துலிப் மொட்டு உற்பத்தியை உள்நாட்டுமயமாக்குதல், வேளாண் தொழில்நுட்ப நெறிமுறைகளை உருவாக்குதல் மற்றும் பயிர் சாகுபடியை விரிவுபடுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டில் 10,000 மொட்டுக்களுடன் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இரண்டு ஆண்டுகளுக்குள் ஒரு லட்சத்திற்கும்  அதிகமான மொட்டுக்களை வெற்றிகரமாக உற்பத்தி செய்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118738  

----

TS/GK/KPG/SG


(Release ID: 2118939) Visitor Counter : 18


Read this release in: English , Urdu , Hindi