ரெயில்வே அமைச்சகம்
2024-25-ம் நிதியாண்டில் ரயில் சரக்கு பெட்டி உற்பத்தி சாதனை அளவாக 41,929 அலகுகளை எட்டியுள்ளது
Posted On:
04 APR 2025 3:18PM by PIB Chennai
இந்திய ரெயில்வேயானது சரக்கு ரயில் பெட்டி உற்பத்தியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில் 37,650 சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன. 2004-2014-ம் காலகட்டத்தில் உற்பத்தி 13,262 ஆக இருந்த நிலையானது தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது.
இந்த மேம்பாடு ரயில்வே சரக்குகள் இயக்கத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுடன் சரக்கு போக்குவரத்து இயக்கத்தையும் மேம்படுத்தும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக்காட்டுகிறது,
கடந்த மூன்று ஆண்டுகளில் சரக்கு ரயில் பெட்டி மொத்த உற்பத்தி 1,02,369 ஆக உள்ளது.
சரக்கு ரயில் பெட்டி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வலுவான பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிக சரக்கு ரயில் பெட்டிகள் கிடைப்பதால், போக்குவரத்து தடைகள் கணிசமாகக் குறைவதுடன் நிலக்கரி, சிமென்ட், எஃகு போன்ற பொது மொத்த போக்குவரத்தை நம்பியுள்ள தொழில்களில் மேம்பட்ட செயல்திறனை உறுதி செய்யும். சாலைப் போக்குவரத்தை சார்ந்திருப்பது குறைவதன் மூலம், எரிபொருள் நுகர்வு, கார்பன் உமிழ்வும் குறையும்.
இந்திய ரயில்வேயின் சரக்குகளைக் கையாளும் திறன் தொடர்ந்து மேம்படுவதால், நாட்டின் தொழில்துறை உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மீள்தன்மை வலுவடைகிறது. இந்த வளர்ச்சி உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தக போட்டித்தன்மையை அதிகரிக்கும். இது உலகளாவிய பொருளாதார சக்தியாக இந்தியாவை மாற்றும் நடவடிக்கையை வலுப்படுத்துகிறது.
**
(Release ID: 2118737)
TS/GK/KPG/SG
(Release ID: 2118899)
Visitor Counter : 23