பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடலோரப் பாதுகாப்பு மேம்பாடு

प्रविष्टि तिथि: 04 APR 2025 2:41PM by PIB Chennai

இந்திய கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய கடலோரக் காவல்படை பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.

நாள்தோறும் கண்காணிப்பு பணிக்காக 18 முதல் 20 கப்பல்கள், 30 முதல் 35 படகுகள், 10 முதல் 12 விமானங்களை இந்தியக் கடலோரக் காவல் படை ஈடுபடுத்துகிறது.  பாதுகாப்பை வலுப்படுத்தவும் கடல்சார் விதி அடிப்படையில் ஒழுங்கைப் பராமரிக்கவும் கடலோரக் காவல் படையானது கடல்சார் சட்ட அமலாக்கத்தை உறுதி செய்துள்ளது. கடல்சார் மேம்பாட்டுப் பகுதி, தீவுகளை ஒட்டிய கடல் பகுதிகளில் கண்காணிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கடலோரக் கண்காணிப்பு தொடரமைப்பு, தொலைதூர இயக்க நிலையம், மையங்கள்  மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், கடலோரப் பாதுகாப்பு பயிற்சிகள்நடவடிக்கைகள் உட்பட 3,645 கூட்டு கடலோர ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் எல்லை தாண்டியதாக மொத்தம் 179 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, மேலும் இந்திய கடல் பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 1,683 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத குடியேற்றம் போன்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக படகுகள் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளன.

கடல்சார் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் இந்தியக் கடலோரக் காவல்படை, மீனவர்களை உள்ளடக்கிய சமூகத் தொடர்பு திட்டங்களையும் செயல்படுத்துகிறது. இது தொடர்பான கலந்துரையாடல்களின் போது, பல்வேறு கடல்சார் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. கடலில் பிரச்சனைக்குரிய நிகழ்வுகள் குறித்து புகாரளிக்க 1554 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்க மாநிலங்களில் மீனவர் கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடலோரப் பாதுகாப்பை திறம்படச் செயல்படுத்த இந்தியக் கடலோரக் காவல்படை  பணியாளர்களுக்கும் கடலோரக் காவல்துறை பணியாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் பாதுகாப்பு இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இதனைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2118702)

TS/GK/KPG/SG

 

 

 


(रिलीज़ आईडी: 2118845) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी