விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

சமூக மேம்பாட்டுக்கும் பேரிடர் மேலாண்மைக்கும் தொலையுணர் தரவைப் பயன்படுத்துதல்

Posted On: 03 APR 2025 5:12PM by PIB Chennai

சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பேரிடர் மேலாண்மைத் திட்டங்களுக்கும் தொலையுணர் தரவு, விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் கிராமப்புற, தொலைதூரப் பகுதிகளை இலக்காகக் கொண்ட பல அரசுத் திட்டங்களில் விண்வெளி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விண்வெளி அடிப்படையிலான உள்ளீடுகளைப் பயன்படுத்தும் முக்கிய திட்டங்கள் பல  உள்ளன.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் புவிசார் தொழில்நுட்பத்தின் கீழ், பல்வேறு பணிகள் கண்காணிக்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த நீர்நிலை மேலாண்மை திட்டத்தின் கீழ் சுமார் 86,000 நுண்நீர் நிலைகளைக் கண்காணிப்பதற்காக இஸ்ரோ டிஓஎஸ் புவிசார் தீர்வை செயல்படுத்தியுள்ளது.

2024-ம் ஆண்டில், செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி பெரிய வெள்ளங்கள் கண்காணிக்கப்பட்டு, சுமார் 300 வெள்ளத் தடுப்புத் திட்டங்கள், மாநில- மத்திய பேரிடர் மேலாண்மை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. தேசிய நீரியல் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோதாவரி, தபி நதிகளுக்கான இடம் சார்ந்த வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை இஸ்ரோ உருவாக்கியது.

2024-ம் ஆண்டில், வெப்பமண்டல புயல்களான ரெமல், அஸ்னா, டானா,  ஃபெங்கல் ஆகியவை  பல்வேறு செயற்கைக் கோள் தரவுகளுடன் கண்காணிக்கப்பட்டன.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர்  டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID 2118302)

TS/PLM/KPG/DL


(Release ID: 2118439) Visitor Counter : 15
Read this release in: English , Urdu , Hindi