சுற்றுலா அமைச்சகம்
சிபிஎஸ்பி திட்டத்தின் தற்போதைய நிலை
இடுகை இடப்பட்ட நாள்:
03 APR 2025 4:08PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகமானது திறன் மேம்பாட்டுத் திட்டமான சிபிஎஸ்பி திட்டத்தின் கீழ் அரசு நிறுவனங்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விருந்தோம்பல் தொடர்பாகவும் சுற்றுலா தொடர்பாகவும் குறுகிய காலப் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்தப் பயிற்சித் திட்டங்களில் தொழில்முனைவோர் பயிற்சி, சுற்றுலா திறன் பயிற்சி போன்றவை அடங்கும். சிபிஎஸ்பி திட்டத்தின் கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் சுற்றுலா, விருந்தோம்பல் துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்துகின்றன.
2023-24-ம் நிதியாண்டில் 24153 பேர் சிபிஎஸ்பி திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளனர்.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய சுற்றுலா, கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இதனைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2118255)
TS/PLM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2118425)
வருகையாளர் எண்ணிக்கை : 32