சுற்றுலா அமைச்சகம்
சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் உள்ள ஹோட்டல்களின் தர மதிப்பீடு
प्रविष्टि तिथि:
03 APR 2025 4:12PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நட்சத்திர மதிப்பீட்டு முறையின் கீழ் ஹோட்டல்கள் வகைப்படுத்தப்படுகிறது. இந்த முறையின் கீழ், ஹோட்டல்களுக்கு (https://nidhi.tourism.gov.in) இணையதளம் மூலம் மது வசதி அல்லது மது வசதி அல்லாத ஹோட்டல்களுக்கு ஒரு நட்சத்திரத்திலிருந்து மூன்று நட்சத்திரம், நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர டீலக்ஸ் மதிப்பீடு வழங்கப்படுகிறது. அமைச்சகம், தொழில்துறை சங்கங்கள், ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம் ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட ஹோட்டல் & உணவக ஒப்புதல் மற்றும் வகைப்படுத்தல் குழு என்ற குழுவால் வகைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
சுற்றுலா அமைச்சகத்தால் 2019 முதல் மாநில வாரியாக வகைப்படுத்தப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சகத்தால் 2019 முதல் மாநில வாரியாக வகைப்படுத்தப்பட்ட மூன்று நட்சத்திர ஹோட்டல்களின் எண்ணிக்கை மற்றும் 2019 முதல் சுற்றுலா அமைச்சகத்தால் மாநில வாரியாக வகைப்படுத்தப்பட்ட நான்கு நட்சத்திர ஹோட்டல்களின் எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 43 ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும், 7 மூன்று நட்சத்திர ஹோட்டல்களும், 19 நான்கு நட்சத்திர ஹோட்டல்களும் உள்ளன.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2118260)
TS/IR/RR/SG/DL
(रिलीज़ आईडी: 2118423)
आगंतुक पटल : 31