தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அஞ்சல் அலுவலக விதிகள், 2024-ன் நவீனமயமாக்கல் மற்றும் தாக்கம்

Posted On: 03 APR 2025 2:57PM by PIB Chennai

அஞ்சல் பொருட்கள் மற்றும் சேவைகளைச் சீரமைத்தல், புதிய அஞ்சல் மற்றும் பார்சல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குதல், நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள் போன்ற மக்களை மையமாகக் கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் ஊரகப் பகுதிகள் உட்பட சேவை வழங்கலின் தரத்தை மேம்படுத்துவதற்கு அஞ்சலக விதிகள், 2024 வடிவமைக்கப்பட்டுள்ளது.

 அஞ்சல் சேவை மக்கள் சேவை என்ற கொள்கையானது  அணுகல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் மின்னணு மயமாக்கப்பட்ட அஞ்சல் சேவைகள் மூலம் இதுவரை சேவை இல்லாத இடங்களிலும் ஊரகப் பகுதிகளிலும் இப்போது சேவை வழங்கப்படுகிறது. இத்துறை "உலகளாவிய அஞ்சல் சேவைகள்"-ன் கீழ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது, அவை குறைந்த கட்டணத்தில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடியவையாகும். இடத்தை அறியும் வசதி, பொருட்களின் விநியோக நிலை குறித்து குறுஞ்செய்தி சேவை மூலம் மின்னணு தகவல் அளித்தல், எம்-பேங்கிங், மின்னணு வங்கி போன்ற வசதிகள் மக்களை மையமாகக் கொண்ட பல்வேறு சேவைகளை வழங்குகின்றன.

வணிகம் செய்வதை எளிதாக்குவதற்காக அஞ்சல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமரின் - விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கிராமப்புற கைவினைஞர்களுக்கு 1.38 லட்சம் கைவினைக் கருவிகளையும் துறை விநியோகம் செய்துள்ளது.

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.

***

 

(Release ID: 2118198)
TS/IR/RR/SG


(Release ID: 2118252) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi