கூட்டுறவு அமைச்சகம்
உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டத்திற்கான முன்னோட்ட நடவடிக்கை
Posted On:
02 APR 2025 3:32PM by PIB Chennai
நாட்டில் விரிவாக்கப்பட்ட உணவு தானிய சேமிப்புத் திறனை உருவாக்கும் வகையில், கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்திற்கு 31.5.2023 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க அளவிலேயே விவசாய உள்கட்டமைப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும். தற்போதுள்ள பல்வேறு திட்டங்களான வேளாண் உள்கட்டமைப்பு நிதியம், வேளாண் விற்பனை உள்கட்டமைப்பு திட்டம் போன்ற திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. விரிவாக்கப்பட்ட கிடங்குகள், தனிப்பயன் வாடகை மையங்கள், பதப்படுத்தும் அலகுகள், தரம் பிரித்தல், குளிர்பதன சேமிப்பு அலகுகள், சிப்பம் கட்டும் இல்லங்கள் போன்றவை தொடக்க வேளாண் கடன் சங்க அளவில் கிடைக்க இது உதவும்.
தொடக்க வேளாண் கடன் சங்கங்கள் நிலையில் தானியங்களின் உள்ளூர் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் போக்குவரத்து மற்றும் சரக்கு விநியோகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் இந்தத் திட்டம் உதவுகிறது. நீண்ட தூர சரக்கு போக்குவரத்து செலவுகள் குறைகிறது. கூடுதலாக, வேளாண் சந்தைப்படுத்தல், கொள்முதல் அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், விவசாயிகளுக்கு தானிய சேமிப்பு வசதிகளுக்கான நேரடி வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது, இடைத்தரகர்களை சார்ந்திருப்பதைக் குறைக்கிறது. விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்வது, போக்குவரத்து செலவுகளைக் குறைப்பது மற்றும் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117766
***
TS/SV/KPG/DL
(Release ID: 2117989)
Visitor Counter : 15