சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் உட்பட அனைத்துப் பிரிவினரின் மேம்பாட்டிற்கான மத்திய அரசின் திட்டங்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2025 3:05PM by PIB Chennai
சிறுபான்மையினர், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய பிரிவினர் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் நாடு முழுவதும் மத்திய அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட ஆறு சிறுபான்மையின சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி அதிகாரமளிப்பதற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
1. கல்வி அதிகாரமளிக்கும் திட்டங்கள்
i. பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டம்
ii. பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகைத் திட்டம்
iii. தகுதி மற்றும் சராசரி வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டம்.
கல்வி உதவித்தொகை திட்டங்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (தேசிய தகவல் மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது) மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் பயனாளிகளைச் சென்றடையும் வகையில், ஆதார் பணப்பரிவர்தத்னை இணைப்பு முறை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117731
----
TS/SV/KPG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2117934)
வருகையாளர் எண்ணிக்கை : 38