சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலையோர வசதிகள் (WSA)
Posted On:
02 APR 2025 2:20PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைகள் / விரைவுச் சாலைகளில் 501 சாலையோர வசதிகளை அரசு தற்போது வழங்கியுள்ளது. இவற்றில் 94 சாலையோர வசதிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 2028-2029 நிதியாண்டில் 700-க்கும் மேற்பட்ட சாலையோர வசதிகள் கட்டி முடிக்கப்பட்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழியோர வசதிகளில் எரிபொருள் நிலையம், மின்சார வாகன சார்ஜிங் நிலையம், கழிப்பறைகள், குடிநீர், பார்க்கிங், தாபா / உணவகங்கள் போன்ற வசதிகள் உள்ளன. தர கண்காணிப்பு நோக்கத்திற்காக பயனர்கள் டிஜிட்டல் உள்ளீடுகளை வழங்க உதவும் டிஜிட்டல் பின்னூட்ட அமைப்பும் இவ்விடங்களில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சாலையோர வசதிகள் தனியார் ஏலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபரேட்டர்களால் இயக்கப்படுகின்றன. இருப்பினும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்கவும், பிரத்யேக மண்டலங்களில் கட்டாய வசதிகளின் ஒரு பகுதியாக கியோஸ்க் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் விளைபொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கதர் கிராமத் தொழில் ஆணையம் மூலம் அனுமதிக்கப்பட்ட வசதிகளாக கிராமக் கண்காட்சித் திடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏல முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபரேட்டர்களால் இந்த வசதிகள் நடத்தப்படுவதால், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்பு விவரங்கள் அரசால் பதிவு செய்யப்படுவதில்லை.
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் சுமார் 40-60 கிலோமீட்டர் இடைவெளியில் சாலையோர வசதிகளை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலை சரக்கு போக்குவரத்து மேலாண்மை நிறுவனம் மூலம் அரசு திட்டமிட்டுள்ளது.
***
(Release ID: 2117704)
TS/PKV/RR/SG
(Release ID: 2117884)
Visitor Counter : 31