ஜவுளித்துறை அமைச்சகம்
ஏற்றுமதியில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கங்கள்
Posted On:
02 APR 2025 1:03PM by PIB Chennai
நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்க நட்பு நாடுகளுடன் 14 தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் 6 முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி, செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட கம்பளி, பட்டு மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளன.
ஜவுளித் துறையை ஊக்குவிக்கவும், அதன் போட்டித்தன்மையை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் / முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. நவீன, ஒருங்கிணைந்த, உலகத் தரம் வாய்ந்த ஜவுளி உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். ஜவுளித் துறையில் உற்பத்தியை அதிகரிக்கவும் போட்டித்தன்மையை மேம்படுத்தவும் மனிதரால் தயாரிக்கப்படும் செயற்கை இழையிலான ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம், ஆராய்ச்சி கண்டுபிடிப்பு, மேம்பாடு, சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. இதன்படி தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம், சமர்த் திட்டம் ஆகியன ஜவுளித் துறை உற்பத்தியில் உத்வேகம் அளிக்கவும், வேலைவாய்ப்பு அடிப்படையிலான, திறன் மேம்பாட்டுத் திட்டத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கெரிட்டா இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117660
***
TS/SV/KPG/SG
(Release ID: 2117774)
Visitor Counter : 47