ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: பாரத் டெக்ஸ் 2025

Posted On: 02 APR 2025 1:02PM by PIB Chennai

இந்திய ஜவுளி மதிப்பின் வலிமையை வெளிப்படுத்தவும், ஜவுளி மற்றும் ஆடை அலங்காரத் துறையில் சமீபத்திய முன்னேற்றம்/புதுமைகளை எடுத்துக்காட்டவும், ஜவுளித் துறையில் ஆதாரம் மற்றும் முதலீட்டுக்கு மிகவும் விருப்பமான இடமாக இந்தியாவை நிலைநிறுத்தவும் உலகளாவிய பெரிய அளவிலான ஜவுளி நிகழ்வை அதாவது பாரத் டெக்ஸ் 2025-ஐ ஏற்பாடு செய்வதில் ஏற்றுமதி மேம்பாட்டு குழுமங்கள் மற்றும் சங்கங்களுக்கு அமைச்சகம் ஆதரவளித்துள்ளது.

இந்த நிகழ்வு 2.2 மில்லியன் சதுர அடியில் நடைபெற்றது. 5,000-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர். இது நாட்டின் ஜவுளித்துறையின் விரிவான சூழல் அமைப்பை எடுத்துக்காட்டியது.  உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,20,000-க்கும் மேற்பட்ட வர்த்தகப் பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பாரத் டெக்ஸ் 2025 தொழில்துறை தலைவர்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் புதுமையாளர்களுக்கான ஒரு முதன்மையான தளமாக செயல்பட்டது. இது ஜவுளித் துறை முழுவதிலுமிருந்து முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இந்த நிகழ்வு உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே ஒத்துழைப்பை எளிதாக்குகிறது, அவர்களின் நிபுணத்துவம், அதிநவீன கண்டுபிடிப்புகள் மற்றும் சமீபத்திய சேகரிப்புகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இது மூலப்பொருட்கள் முதல் பாகங்கள் உள்ளிட்ட நிறைவு செய்யப்பட்ட தயாரிப்புகள் வரை முழு ஜவுளி விநியோகச் சங்கிலியையும் ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைத்தது.

ஜவுளி உற்பத்தியை அதிகரிப்பது, உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவது, புதுமைகளை வளர்ப்பது மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசின் கவனம் உலகளாவிய ஜவுளி மையமாக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தியுள்ளது. பாரத் டெக்ஸ் 2025 இந்த முன்னேற்றங்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது, அதே நேரத்தில் நிலையான மற்றும் உயர் மதிப்பு ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

பாரத் டெக்ஸ் 2025 இல் உலகளாவிய அளவிலான மாநாடு, வட்டமேசைகள், குழு விவாதங்கள் மற்றும் பயிலரங்குகள் ஆகியவை இடம்பெற்றன. இதில் சிறப்பு கண்டுபிடிப்பு மற்றும் புத்தொழில் அரங்குகள் இடம்பெற்ற கண்காட்சிகளும் அடங்கும். 

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்கெரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117659

***

TS/IR/AG/SG

 

 


(Release ID: 2117759) Visitor Counter : 17


Read this release in: English , Urdu , Hindi