மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
பால் பண்ணைத் தொழிலை மேம்படுத்துதல்
प्रविष्टि तिथि:
01 APR 2025 5:11PM by PIB Chennai
பால் உற்பத்தியை மேம்படுத்துதற்கும், பால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், பால் உற்பத்தி துறையில் தன்னிறைவை அடையவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முயற்சிகளுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பால்வள மேம்பாட்டுக்கான தேசிய திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒடிசாவிற்கு ரூ. 1591.08 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை நோய்களை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகளுக்கு கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் உதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வீட்டு வாசலுக்கு வந்து தரமான கால்நடை சுகாதார சேவைகளை வழங்கும் வகையில் நடமாடும் கால்நடை பிரிவுகள் செயல்பாட்டில் உள்ளன.
இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் இணை அமைச்சர் பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117333
*****
TS/GK/AG/SG/DL
(रिलीज़ आईडी: 2117505)
आगंतुक पटल : 46