எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எஃகு ஏற்றுமதி மற்றும் விலை நிர்ணயம்

Posted On: 01 APR 2025 4:29PM by PIB Chennai

கடந்த 2023-24 ஆண்டில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு 95 ஆயிரம் டன் எஃகு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு 1924 கோடி ரூபாயாக உள்ளது. நாட்டில் எஃகு துறையின் வளர்ச்சிக்கு உகந்த சூழலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

பரஸ்பர நன்மை பயக்கும் மற்றும் நியாயமான முறையில் மத்திய அரசு அமெரிக்க அரசுடன் இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளும் 2025 பிப்ரவரி 13, அன்று வெளியிட்ட  கூட்டு அறிக்கையில் எஃகு உட்பட பல துறைகளில் வர்த்தக உறவை வலுப்படுத்துவதன் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்க-இந்தியா வர்த்தகத்தை 500 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாக்கும் வகையில் இலக்கை நிர்ணயித்துள்ளன.

இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117301

 

*****

TS/GK/AG/SG/DL


(Release ID: 2117499) Visitor Counter : 23
Read this release in: English , Urdu , Hindi