உள்துறை அமைச்சகம்
பனிப்பாறை வெடிப்பால் ஏற்படும் வெள்ளத்தை தடுக்க நடவடிக்கை
Posted On:
01 APR 2025 3:51PM by PIB Chennai
2016 நவம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஆசிய அமைச்சர்கள் மாநாட்டின் போது பிரதமர் பத்து அம்ச செயல் திட்டத்தை அறிவித்தார்.
பேரிடர் அபாய மேலாண்மை முயற்சிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கு அந்நியச் செலாவணி தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பை மேம்படுத்துவதற்கு உள்ளூர் திறன் மற்றும் முன்முயற்சியை உருவாக்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் மேம்பட்ட முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் பேரிடர் முன்னறிவிப்புக்கு அரசு தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்துகிறது. பல்வேறு இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே எச்சரிப்பதற்காக மத்திய அரசு நோடல் நிறுவனங்களை நியமித்துள்ளது.
தேசிய சூறாவளி அபாயக் குறைப்புத் திட்டத்தின் கீழ், கடலோர மாநிலங்களில் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன, அவை சமீபத்திய சூறாவளிகளின் போது கடலோர சமூகத்திற்கு எச்சரிக்கையை பரப்புவதில் பெரும் உதவியாக இருந்தன.
'பொது எச்சரிக்கை நெறிமுறை அடிப்படையிலான ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பு 354.83 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும், எஸ்எம்எஸ், டிவி, ரேடியோ, இணையம் போன்ற பல்வேறு பரவல் ஊடகங்களைப் பயன்படுத்தி, அனைத்து எச்சரிக்கை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மூலம், பேரிடர்கள் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இந்திய வானிலை ஆய்வுத்துறை பாதிக்கப்பட்ட/பாதிக்கப்படக்கூடிய அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் சூறாவளி மற்றும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிடுகிறது.
வங்காள விரிகுடா மற்றும் அரேபிய கடலில் உருவாகும் புயல்களைக் கண்காணிக்க, செயற்கைக்கோள்கள், ரேடார்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களிலிருந்து தரமான கண்காணிப்புகளின் தொகுப்பை இந்திய வானிலை ஆய்வுத்துறை பயன்படுத்துகிறது.
மத்திய நீர் ஆணையம் 902 பனிப்பாறை ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை கண்காணித்து, ஒப்பீட்டு மாற்றத்தைக் கண்டறிவதையும், அடையாளம் காண்பதையும் சாத்தியமாக்குகிறது.
இந்த தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சக இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117268
***
TS/GK/AG/SG/DL
(Release ID: 2117440)
Visitor Counter : 19