கனரகத் தொழில்கள் அமைச்சகம்
வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம்
Posted On:
01 APR 2025 4:22PM by PIB Chennai
வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டம் (பி.எல்.ஐ) ரூ.25,938 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. 2024-25 நிதியாண்டில், நான்கு விண்ணப்பதாரர்கள் ஊக்கத்தொகை கோரிக்கைகளை சமர்ப்பித்தனர். இந்த 4 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.322.01 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பி.எல்.ஐ-ஆட்டோ திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை அடிப்படை ஆண்டை விட ஒரு குறிப்பிட்ட ஆண்டின் அதிகரிக்கும் தகுதியான விற்பனையாக வரையறுக்கப்பட்ட> தீர்மானிக்கப்பட்ட விற்பனை மதிப்பில் பொருந்தும். பிப்ரவரி, 2025 நிலவரப்படி அதிகரிப்பு விற்பனைக்கு இலக்கு இல்லை. 2024 டிசம்பர் 31 வரை, பிஎல்ஐ ஆட்டோ திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த நிர்ணயிக்கப்பட்ட விற்பனை ரூ.15,230 கோடியாகும்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் எஃகு மற்றும் கனரகத் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு. பூபதிராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2117292)
TS/PKV/RR/SG/DL
(Release ID: 2117439)
Visitor Counter : 24