மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான காப்பீட்டை ஊக்குவித்தல்

Posted On: 01 APR 2025 3:42PM by PIB Chennai

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறைகளின் மேம்பாட்டிற்காக அந்த அமைச்சகம் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம்,  மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், பிரதமரின் மீன் வளர்ப்பு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம், கால்நடை சுகாதாரம், நோய் கட்டுப்பாட்டுத் திட்டம், உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், பால்வள மேம்பாடு,  தேசிய பசு இயக்கம், கால்நடை கணக்கெடுப்பு , தேசிய கால்நடை இயக்கம் மற்றும் கூட்டுறவு பால்பண்ணை போன்ற திட்டங்கள் வாயிலாக கடந்த 2024-25-ம் ஆண்டில், நாடு முழுவதும் பல்வேறு வளர்ச்சித் திட்ட நடவடிக்கைகளுக்காக 5113.00 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 3459.74 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகத்தின்  பிரதம மந்திரி மத்ஸ்ய கிசான் சம்ரிதி சஹ்- யோஜனா என்ற திட்டமானது 2023-24 நிதியாண்டு முதல் 2026-27 நிதியாண்டு வரை நான்கு ஆண்டு காலத்திற்கு ரூ.6000 மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 4 ஹெக்டேர் வரையிலான நீர்ப்பரப்பு கொண்ட பண்ணைகளுக்கு காப்பீடு வாங்குவதற்காக மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கு ஒரு முறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பிரீமியம் தொகையில் 40% ஒரு முறை மானியமாக வழங்கப்படுகிறது.

மீன் வளர்ப்புப் பண்ணையின் நீர்ப்பரப்பு பரப்பில் ஹெக்டேருக்கு ரூ.25,000 என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு,  'ஒரு முறை ஊக்கத்தொகை' வழங்கப்படுகிறது. 4 ஹெக்டேர் நீர்ப்பரப்பு கொண்ட பண்ணைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் இதனைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117260

***

TS/SV/KPG/SG

 

 


(Release ID: 2117385) Visitor Counter : 14


Read this release in: English , Urdu , Hindi