மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அலங்கார மீன் ஏற்றுமதித் தொழில்

Posted On: 01 APR 2025 3:36PM by PIB Chennai

வடகிழக்கு, தென் மாநிலங்கள் உட்பட நாட்டில் வண்ண மீன் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய மீன்வளத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் மீன் வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த நான்கு நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2023-24 வரை) மற்றும் நடப்பு நிதியாண்டில் (2024-25) 230.45 கோடி ரூபாய் செலவில் 2465 எண்ணிக்கையிலான வண்ண மீன் வளர்ப்புப் பிரிவுகள், 207 ஒருங்கிணைந்த வண்ண மீன் வளர்ப்பு அலகுகள், 5 நன்னீர் மீன் வளர்ப்பு வங்கி மற்றும் 144 பொழுதுபோக்கு மீன்வளர்ப்பு அலகுகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வண்ணமீன் வளர்ப்புத் துறையில் தொழில் முனைவோர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை வண்ண மீன்வளர்ப்புத் தொகுப்பாக 2024-25-ம் ஆண்டில் மத்திய அரசின் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. வட இந்திய பாரம்பரிய வண்ண மீன் வகைகளை காட்சிப் படுத்தும் வகையில் காம்ரூப்பில் உள்ள அமின்கானில் ஒரு வண்ண மீன்காட்சியகம் அமைக்கும் அசாம்  மாநில அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வண்ண மீன்வள ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான உத்திகள்,செயல் திட்டங்கள் ஆகியவற்றைத் தயாரிக்க, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் –மத்திய நன்னீர் உயிரின வளர்ப்பு நிறுவனத்தின் திட்ட முன்மொழிவுக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வண்ண மீன்களுக்கான  மதிப்புக் கூட்டுச் நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 11 வண்ண மீன் உற்பத்தி மற்றும் வளர்ப்பு அலகுகள் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அமைக்க மத்தியப்பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மீன்வளம், நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான  உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் கீழ், திருநெல்வேலியில் ஒரு பொது மீன்காட்சியகம் மற்றும் வண்ண மீன் சில்லறை விற்பனை நிலையம் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான தமிழக அரசின் திட்ட முன்மொழிவுக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு. ஜார்ஜ் குரியன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117255

----

TS/SV/KPG/SG


(Release ID: 2117384) Visitor Counter : 15


Read this release in: English , Urdu , Hindi