கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பெரிய அளவிலான துறைமுகங்களை மேம்படுத்தும் மாஸ்டர் திட்டம்
Posted On:
01 APR 2025 3:26PM by PIB Chennai
ஆண்டுக்கு 300 மில்லியன் டன்களுக்கு மேல் திறன் கொண்ட கொச்சின் - விழிஞ்சம் துறைமுகத் தொகுப்பு, கலாத்தியா தெற்கு விரிகுடா துறைமுகம், சென்னை- காமராஜர்-கடலூர் துறைமுகத் தொகுப்பு, பாரதீப் மற்றும் பெரியதல்லாத துறைமுகத் தொகுப்புகள் என நான்கு துறைமுகத் தொகுப்புகள், ஆண்டுக்கு 500 மில்லியன் டன் திறன் கொண்ட தீன்தயாள் மற்றும் டுனா டெக்ரா துறைமுகத் தொகுப்பு, ஜவஹர்லால் நேரு - வாதவன் துறைமுகத் தொகுப்புகள் ஆகிய இரண்டு தொகுப்புகள் என மொத்தம் ஆறு துறைமுகத் தொகுப்புகள் 2047 ஆம் ஆண்டுக்குள் பெரிய அளவிலான துறைமுகங்களாக மேம்படுத்தப்படுகின்றன. இந்த துறைமுகங்களின் திறனை அதிகரிப்பதற்கும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்கு 2047- ன் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகள் ஏற்கனவே பொது- தனியார் கூட்டாண்மை முறை மூலம் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தகவலை மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.
***
(Release ID: 2117248)
TS/GK/AG/SG
(Release ID: 2117322)
Visitor Counter : 20