சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் குறித்த அண்மைத் தகவல்
प्रविष्टि तिथि:
01 APR 2025 2:12PM by PIB Chennai
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்திற்கு மாநில/யூனியன் பிரதேசங்களின் செயல்திட்ட அமல்படுத்தல் அடிப்படையில் நிதி ஒதுக்கப்படுகிறது. தேசிய அளவில் தொழுநோய் ஒழிப்பு நிலை எட்டப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் பூஜ்ஜியம் நிலையை அடைய மத்திய அரசு தொழுநோய் ஒழிப்பு செயல்திட்ட வரைபடத்தை அறிமுகப்படுத்தியது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் தொழுநோயைக் கண்டறிதல், கண்காணிப்பு, தொழுநோய் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களைபா பரிசோதிப்பதற்காக பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தில் தொழுநோய் பரிசோதனை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவமனைகள்/மருத்துவக் கல்லூரிகள்/மத்திய தொழுநோய் நிறுவனங்களில் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளிக்கும் ரூ.12,000/- நலத்திட்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2023-ம் ஆண்டில் 17 மாநிலங்களில் தொழுநோய் கண்டறிதல் முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் 31,088 பேருக்கு புதிதாக தொழு நோய் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117214
***
TS/GK/AG/SG
(रिलीज़ आईडी: 2117310)
आगंतुक पटल : 82