பாதுகாப்பு அமைச்சகம்
டைகர் டிரையம்ப் பயிற்சியின் 4-வது பதிப்பு நாளை தொடங்குகிறது
Posted On:
31 MAR 2025 5:29PM by PIB Chennai
இந்தியா-அமெரிக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண இருதரப்பு முப்படை பயிற்சியான டைகர் ட்ரையம்ப் பயிற்சியின் நான்காவது பதிப்பு, ஏப்ரல் 01 முதல் 13 வரை கிழக்கு கடற்பரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நிலையான இயக்குதல் வழிகாட்டி தொகுப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
இந்தியத் தரப்பில் ஜலாஷ்வா, கரியால், மும்பை , சக்தி ஆகிய இந்திய கடற்படை கப்பல்கள், ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் தரையிறங்கும் படகுகள், நீண்ட தூர கடல்சார் ரோந்து விமானம் 91-வது ஐஎன்எஃப் பிரிகேட் மற்றும் 12 மெக் காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், விமானப்படை சி-130 விமானங்கள், எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள், விரைவு அதிரடி மருத்துவக் குழு ஆகியவை பங்கேற்கின்றன. அமெரிக்க தரப்பில் அமெரிக்க கடற்படை கப்பல்களான காம்ஸ்டாக் மற்றும் ரால்ப் ஜான்சன் ஆகியவையும் அமெரிக்க மரைன் டிவிஷனின் துருப்புகளும் பங்கேற்க உள்ளன.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏப்ரல் 01 முதல் 07, 25 வரை துறைமுகப் பயிற்சி கட்டம் நடைபெறும். கூட்டு கொடி அணிவகுப்பு மற்றும் ஊடக கலந்துரையாடலுடன் தொடக்க விழா ஐஎன்எஸ் ஜலாஷ்வா கப்பலில் ஏப்ரல் 1 அன்று நடைபெறும். இருதரப்பிலும் உள்ள பங்கேற்பாளர்கள் பயிற்சிப் பயணங்கள், பாட வல்லுநர் பரிமாற்றங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமூக கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவார்கள். துறைமுகக் கட்டம் முடிந்ததும், துருப்புக்களுடன் புறப்படும் கப்பல்கள், கடல் கட்டத்திற்குச் சென்று, காக்கிநாடா அருகே கடல்சார், நீர்நில நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இந்தப் பயிற்சியின் போது, இந்திய ராணுவம் மற்றும் அமெரிக்க கடற்படையினரால் ஒரு கூட்டு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் காக்கிநாடா கடற்படை வளாகத்தில் நிறுவப்படும். இந்திய விமானப்படையின் ஆர்.ஏ.எம்.டி மற்றும் அமெரிக்க கடற்படை மருத்துவக் குழுவும் மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக கூட்டு மருத்துவ முகாமை அமைக்கும். விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 13 அன்று அமெரிக்க கடற்படை கப்பல் காம்ஸ்டாக்கில் நிறைவு விழாவுடன் இந்தப் பயிற்சி நிறைவடையும்..
***
TS/PKV/KV
(Release ID: 2117060)
Visitor Counter : 35