இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் ஆகியோர்  நாடு தழுவிய ‘ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணிக்கு வழிநடத்தினர்

Posted On: 30 MAR 2025 3:52PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா குஜராத் மாநிலம் ஜூனாகத் நகரில் இன்று நடைபெற்ற நாடு தழுவிய ‘ஃபிட் இந்தியா ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணிக்கு தலைமை தாங்கினார். அதே நேரத்தில், திருவனந்தபுரம் கிளிஃப் ஹவுஸில் இருந்து மாண்புமிகு கேரள முதல்வர் திரு பினராயி விஜயன் சைக்கிள் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த வார ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பேரணி நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் ஈடுபாடு குறித்து  வலியுறுத்தப்பட்டது, அவர்கள் தங்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சைக்கிள் ஓட்டினர். "நீங்கள் சைக்கிள் ஓட்டுதலுடன் வாழ்நாள் முழுவதும் நட்பை உருவாக்க முடியும், எனவே இந்த பயிற்சியை உங்கள் சிறந்த நண்பராக ஆக்குங்கள்" என்று டாக்டர் மாண்டவியா ஜுனாகத் நிகழ்வில் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தார். "ஃபிட் இந்தியா பிரச்சாரம் நாடு தழுவிய திருவிழாவாக வளர்ந்து வருகிறது, ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளில் பள்ளிக் குழந்தைகள் பெருமளவில் பங்கேற்பது இதை தெளிவாக சித்தரிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்" என்றார்.

சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள ஷிவ்தாராய் மற்றும் ஜஞ்ச்கிர் சம்பா, பீகாரில் தர்பங்கா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ஓராய் போன்ற மாவட்டங்களில் கேலோ இந்தியா மையங்களில் (கே.ஐ.சி)  சைக்கிள் பேரணிகள் நடத்தப்பட்டன.

தேசிய தலைநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அர்ஜுனா விருது பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை சோனியா லாதர் மற்றும் 22 வயதுக்குட்பட்ட ஆசிய சாம்பியன்ஷிப் 2024 இல் தங்கப் பதக்கம் வென்றவரும், கேலோ இந்தியா திட்ட தடகள வீராங்கனையுமான பிராச்சி தன்கர் ஆகியோர் இதில் இணைந்தனர். 'புஷ்-அப் மேன் ஆஃப் இந்தியா' ரோஹ்தாஷ் சவுத்ரி இந்த நிகழ்வுக்குத் திரும்பினார், அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தீப்தி சர்மா இந்த நிகழ்வில் காணொலிகள் காட்சி மூலம் பங்கேற்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116807    

************ 

BR/KV


(Release ID: 2116997) Visitor Counter : 20