சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் சுகாதார திட்டத்தில் புதுப்பிப்பு குறித்த விவரம்
Posted On:
28 MAR 2025 4:58PM by PIB Chennai
பொருளாதார ஆய்வறிக்கை 2024-25, ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள தாக்கங்களை எடுத்துக்காட்டுகிறது. அதிகரித்து வரும் சமூகப் பாதுகாப்பு, ஆரம்ப சுகாதார செலவினங்கள் மூலம் வருவாய்க்கும் அதிகமான செலவுகளைக் குறைப்பதில் இத்திட்டம் பங்காற்றி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் சேமிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் போன்ற காப்பீட்டுத் திட்டங்கள், மாநில அரசுகளின் சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றுக்கு 2.63% பங்களிக்கின்றன. அரசின் சுகாதார செலவினங்களின் அதிகரிப்பு குடும்பங்களுக்கான நிதிசார் சிக்கல்களை கணிசமான அளவில் குறைத்துள்ளது என்று இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2015 மற்றும் 2022-ம் நிதியாண்டுகளுக்கு இடையில், அரசின் சுகாதாரத் திட்டங்களுகான செலவினம் 29.0% சதவீதத்திலிருந்து 48.0% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சுகாதார செலவுகள் 62.6% இலிருந்து 39.4% ஆக குறைந்துள்ளது.
2025 மார்ச் 24-ம் தேதி நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 36.9 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் இதனைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116209
-----
SV/KPG/DL
(Release ID: 2116415)
Visitor Counter : 30