சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இந்திய நீதித்துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதன் அடிப்படையில் மின்னணு நீதிமன்றங்கள் திட்டம்
Posted On:
28 MAR 2025 5:15PM by PIB Chennai
தேசிய மின் ஆளுமை திட்டத்தின் ஒரு பகுதியாக, மின்னணு நீதிமன்றங்கள் திட்டம், இந்திய நீதித்துறையில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தின்" அடிப்படையில், 2007 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வரும் ஒருங்கிணைந்த குறிக்கோள் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் 14,249 மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களை கணினிமயமாக்குவது, 13,683 நீதிமன்றங்களில் உள்ளூர் இணையவழி வலையமைப்பை நிறுவுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மேலும், 13,436 நீதிமன்றங்களில் கணினி வன்பொருள் நிறுவுதல், 13,672 நீதிமன்றங்களில் மென்பொருள் நிறுவுதல், 14,309 நீதித்துறை அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களிலும் மாற்று மேலாண்மை பணிகள் ஆகியவை முடிவடைந்துள்ளன. 3900-க்கும் அதிகமான நீதிமன்ற ஊழியர்கள் வழக்கு தகவல் அமைப்பு மூலம் கணினி பயிற்சி பெற்றனர்.
மின்னணு நீதிமன்றங்கள் இயக்க திட்ட இரண்டாம் கட்டத்தின் கீழ், குஜராத், குவகாத்தி, ஒடிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பாட்னா, மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், தெலங்கானா, மேகாலயா மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிமன்ற நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு தொடங்கியுள்ளது.
இதுவரை, மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்களில் 2,57,14,770 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 92,31,640 வழக்குகளும், காணொலி கலந்துரையாடல் முறையைப் பயன்படுத்தி விசாரிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் 9,94,054 விசாரணைகள் (மார்ச் 2020 முதல் பிப்ரவரி 2025 வரை) காணொலி கலந்துரையாடல் மூலம் நடந்துள்ளது.
வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞர்கள் எந்த இடத்திலிருந்தும் 24 மணி நேரமும் அணுகவும், பதிவேற்றம் செய்யவும் ஏதுவாக மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மின்னணு தாக்கல் முறை (பதிப்பு 3.0) உருவாக்கப்பட்டுள்ளது. மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை தொடங்கப்பட்டது.
இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116238
***
SMB/GK/RJ /DL
(Release ID: 2116402)
Visitor Counter : 41