ஊரக வளர்ச்சி அமைச்சகம்
பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டம்- நான்காம் கட்டத்தை செயல்படுத்துதல்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAR 2025 5:02PM by PIB Chennai
2022 முதல் 2025 பிப்ரவரி வரை நாடு முழுவதும் பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ், மொத்தம் 69,666.09 கி.மீ நீளத்திற்காக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், 25,000 சாலை இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சாலை இணைப்பை வழங்க பிரதமரின் கிராமப்புறச் சாலைத் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு 2024 செப்டம்பர் 11-ம் தேதி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி. 2024-25 முதல் 2028-29 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 62,500 கி.மீ நீளமுள்ள சாலைகள் ரூ.70,125 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் திட்ட வழிகாட்டுதல்களின்படி தகுதியான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கருத்துருக்களை சமர்ப்பிக்க மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது.
இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116219
***
SMB/GK/RJ /DL
(வெளியீட்டு அடையாள எண்: 2116400)
வருகையாளர் எண்ணிக்கை : 72