கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடல்சார் இந்தியா தொலைநோக்கு திட்டம் 2030

प्रविष्टि तिथि: 28 MAR 2025 3:52PM by PIB Chennai

2021-22 முதல் 2023-24 வரை அனைத்து பெரிய துறைமுகங்களிலும் மொத்தம் 75 துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 13 துறைமுக உள்கட்டமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.  

கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் பெரிய துறைமுகங்களில் ரூ.11,083 கோடி மதிப்பிலான துறைமுகங்களை நவீனப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.5,741 கோடி செலவிடப்பட்டுள்ளது.

அனைத்து 12 பெரிய துறைமுகங்களிலும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையில் பல்வேறு பசுமை தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வை கணிசமாகக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் துறைமுகங்கள் முழுவதும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்துதல், கரையிலிருந்து கப்பலுக்கு மின்சாரம் வழங்குதல், துறைமுக உபகரணங்கள் மற்றும் வாகனங்களை மின்மயமாக்குதல், ஆற்றல்மிக்க உபகரணங்களை நிறுவுதல் உள்ளிட்ட முக்கிய முன்முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன.

இத்தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் போக்குவரத்து நீர்வழிப் பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116164

***

SMB/GK/RJ/KR/DL


(रिलीज़ आईडी: 2116342) आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी