தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்கள் உள்ளிட்ட 5 நகரங்களில் சேவைகளுக்கான உரிமம் பெறப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ட்ராய் வெளியிட்டுள்ள அறிக்கை
Posted On:
28 MAR 2025 3:42PM by PIB Chennai
இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையத்தின் கீழ் செயல்படும் முகமைகள் வாயிலாக ஐந்து நகரங்கள் / நெடுஞ்சாலைகள் / ரயில் வழித்தடங்கள் போன்ற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளின் தரம் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் கர்நாடாகா மாநிலம் பெங்களூரு, ஜபல்பூர், ராய்ப்பூர் – பிலாஸ்பூர் – ராய்கர் நெடுஞ்சாலை, , தில்லி, சோஹ்னா - தௌசா நெடுஞ்சாலை, (தில்லி), விஜயவாடா-குண்டூர், ஹைதராபாத் – விஜயவாடா நெடுஞ்சாலை (ஆந்திரப் பிரதேசம்) ஜெய்ப்பூர் சந்திப்பு - மாதோபூர், பஞ்சாப் ரயில்வே வழித்தடம் (ராஜஸ்தான், ஹரியானா, தில்லி & பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தரவு சேவைகளுக்கான உரிமங்கள் வழங்கப்பட்ட பகுதிகளில் மொபைல் மற்றும் தொலைபேசி சேவை வழங்குநர்களால் வழங்கப்படும் சேவையின் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான சோதனைகள் நடைபெற்றன.
சர்வதேச தொலைபேசி சேவைகளை வழங்கும் நிறுவனங்களான, பார்தி ஏர்டெல் நிறுவனம், பிஎஸ்என்எல் / எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனம் ஆகியவற்றின் செயல்திறன், உரிமம் பெற்ற சேவைப் பகுதிகளில் குரல் மற்றும் தரவுகளுக்கான பல்வேறு தொழில்நுட்பங்கள் (2 ஜி / 3 ஜி / 4 ஜி / 5 ஜி) போன்ற சேவைகளை வழங்குகிறது. இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட அறிக்கை சேவை வழங்குநர்களின் செயல்திறனைக் குறிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116156
***
SV/KPG/DL
(Release ID: 2116336)
Visitor Counter : 25