கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்காக்கள்
प्रविष्टि तिथि:
28 MAR 2025 3:51PM by PIB Chennai
பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 6 பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்காக்களை உருவாக்க உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, மகாராஷ்டிராவில் மும்பை, மேற்குவங்கத்தில் கொல்கத்தா, கேரளாவில் கொச்சி, ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம், குஜராத்தில் கண்ட்லா ஆகிய துறைமுக நகரங்களில் இந்த பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
சென்னையில் அமைக்கப்படவுள்ள பூங்காவிற்கு ஆகும் மொத்த செலவு ரூ.641.92 கோடி ஆகும். மற்ற 5 பூங்காக்கள் தொடர்பான ஆய்வுகள் பல்வேறு நிலைகளில் இருப்பதால் நிதி ஒதுக்கப்படவில்லை. இரண்டாம் கட்ட பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் உருவாக்கத்திற்கான யோசனை இல்லை.
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் கொள்கைப்படி, 45 ஆண்டு சலுகைக் காலத்துடன் அரசு – தனியார்துறை பங்கேற்புடன் பாரத்மாலா பரியோஜனாவின் கீழ் இந்தப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2116163
***
SMB/SG/KR/DL
(रिलीज़ आईडी: 2116334)
आगंतुक पटल : 63