உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்
புதிய உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைத்தல்
प्रविष्टि तिथि:
27 MAR 2025 4:51PM by PIB Chennai
உணவுப் பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சொந்தமாக எந்த உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும் அமைக்கவில்லை. இருப்பினும், மத்திய துறைத் திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டம்(பி.எம்.கே.எஸ்.ஒய்.), உணவுப் பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துகிறது. இவற்றின் மூலம் இத்தகைய தொழில்களை அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது. இத்திட்டங்கள் பிராந்தியம் அல்லது மாநிலம் சார்ந்தவை அல்ல. ஆனால் தேவை அடிப்படையில் செயல்படுத்துகிறது.
திட்டங்களான பிரதமரின் வேளாண்-கடல் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் பதப்படுத்தும் தொகுப்புகளின் மேம்பாட்டுக்கான திட்டத்தின் கீழ், 15-வது நிதி ஆணையக் காலத்தில் ரூ.5520 கோடி மொத்த முதலீட்டில் உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைப்பதற்கு தொழில்முனைவோருக்கு கடனுடன் இணைக்கப்பட்ட மூலதன மானியம் வழங்கப்படுகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உணவு பதப்படுத்தும் தொழல்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
**
TS/PLM/KPG/DL
(रिलीज़ आईडी: 2115940)
आगंतुक पटल : 63