தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரகப் பகுதிகளில் அஞ்சலகப் பணிகளை மேம்படுத்த நடவடிக்கைகள்

Posted On: 27 MAR 2025 5:09PM by PIB Chennai

அஞ்சல் அலுவலகங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் சீரான இடைவெளியில் பல நிலைகளில் கண்காணிக்கப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் அஞ்சலகப் பணிகளை மேம்படுத்த தொலைத்தொடர்புத் துறை கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அஞ்சல் கட்டமைப்பு இணக்கத் திட்டம், பார்சல் கட்டமைப்பு இணக்கத் திட்டம் ஆகியவை பல மட்டங்களில் அஞ்சல் சேவைகளின் செயல்திறன் மேலாண்மையை அதிகரிக்க செயல்படுத்தப்படுகின்றன.

வீட்டிற்கே சென்று அஞ்சல் சேவைகளை வழங்கும் போது கைபேசி செயலி மூலம் சேவை வழங்கப்பட்ட நேரம் பதிவு செய்யப்படுகிறது.

அனைத்து கிளை அஞ்சலகங்களுக்கும் மொபைல் சாதனங்கள், தெர்மல் பிரிண்டர்கள், பயோமெட்ரிக் கருவிகள் போன்ற நவீன டிஜிட்டல் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பணியாளர்கள் அஞ்சல், நிதி, காப்பீடு போன்ற பல்வேறு பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்ள முடிகிறது.

அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் எளிதில் அணுகும் தன்மையையும் பிற வசதிகளையும் மேம்படுத்த, இணைய வங்கி, மொபைல் வங்கி, இகேஒய்சி, இ-பாஸ்புக் போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலைத் தெரிவித்தார்.

***

TS/PLM/KPG/DL


(Release ID: 2115920) Visitor Counter : 41