ஜல்சக்தி அமைச்சகம்
நாடாளுமன்ற கேள்வி: ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் இல்லந்தோறும் தூய்மையான குடிநீர் குழாய் வழி வழங்கும் திட்டத்தின் நிலை
இடுகை இடப்பட்ட நாள்:
27 MAR 2025 2:59PM by PIB Chennai
2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி உட்பட நாட்டின் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்காக ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் இல்லந்தோறும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில், 3.23 கோடி (16.7%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்குவதற்கான இணைப்புகள் இருந்தன. 23.03.2025 நிலவரப்படி, இந்த இயக்கத்தின் கீழ் இல்லந்தோறும் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் சுமார் 12.31 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், மிசோரம், பஞ்சாப் மற்றும் தெலுங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி & டாமன் டையூ மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு. வி. சோமண்ணா இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115690
***
TS/SV/RJ/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2115884)
வருகையாளர் எண்ணிக்கை : 50