தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பிரதமரின் வைஃபி அணுகல் வலைப்பின்னல் இடைமுகம் திட்டம் (பிஎம் வாணி)
Posted On:
26 MAR 2025 4:26PM by PIB Chennai
பிரதமரின் வாணி திட்டத்தின் கீழ் (வைஃபை அணுகல் வலைப்பின்னல் இடைமுகம்) டிஜிட்டல் இந்தியா, மற்றும் அதன் விளைவாக கிடைக்கும் பலன்களை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டில் பொது வைஃபை சேவைக்கான மையங்களை அமைப்பதன் மூலம் இணையதள சேவைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்படும் கட்டமைப்புகள் வாயிலாக பொது தரவு அலுவலகங்கள், அவற்றின் தொழில்நுட்ப-வர்த்தகம் சார்ந்த நடவடிக்கையின் அடிப்படையில் வைஃபை இணையதள சேவைக்கான மையங்கள் நிறுவப்பட்டு சந்தாதாரர்களுக்கு தடையற்ற இணையதள சேவைகளை வழங்க வகை செய்கின்றன.
20.03.2025 நிலவரப்படி, நாட்டில் இத்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிஎம் வாணி வைஃபை மையங்களின் மொத்த எண்ணிக்கை 2,78,439 ஆகும்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2115285
*****
TS/SV/KPG/DL
(Release ID: 2115536)
Visitor Counter : 23