ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்றக் கேள்வி: பாரம்பரிய நெசவாளர்களுக்கான திட்டம்

प्रविष्टि तिथि: 26 MAR 2025 4:23PM by PIB Chennai

நாடு முழுவதும் கைத்தறித் துறைத் தொழில்களை மேம்படுத்த ஜவுளி அமைச்சகம் பல்வேறு திட்டங்கள்/முன்முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. நவீன, ஒருங்கிணைந்த, உலகத் தரம் வாய்ந்த ஜவுளி உள்கட்டமைப்பை உருவாக்க முற்படும் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்கள் திட்டம் இதில் முக்கியமானதாகும்.

சமர்த் திட்டம் வேலைவாய்ப்பு அடிப்படையிலான, திறன் மேம்பாட்டை வழங்குகிறது. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், மேற்கு வங்கத்தில் ஹவுராவில் இரண்டு ஜவுளிப் பூங்காக்களான ஆயத்த ஆடை பூங்கா, மேற்கு வங்க பின்னலாடை ஜவுளிப் பூங்கா ஆகியவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இந்தத் தகவலை தெரிவித்தார்.

***

 

(Release ID: 2115277)

TS/PLM/SG/KR


(रिलीज़ आईडी: 2115491) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी