விண்வெளித்துறை
வர்த்தக ரீதியிலான விண்வெளித் திட்டங்களை என்எஸ்ஐஎல் தொடங்குகிறது
Posted On:
26 MAR 2025 3:30PM by PIB Chennai
வர்த்தக ரீதியிலான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு 2019 மார்ச் மாதத்தில் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல் ) என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த நிறுவனம் இதுவரை சர்வதேச வாடிக்கையாளர்களின் 135 செயற்கைக்கோள்களையும், 3 இந்திய செயற்கைக்கோள்களையும் வர்த்தக அடிப்படையில் விண்ணில் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகள் உயர் தொழில்நுட்ப அடிப்படையில் விண்வெளி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக 5 துருவ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி ஏவு வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக எச்.ஏ.எல் மற்றும் எல் & டி நிறுவனங்களுடன் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதலாவது பி.எஸ்.எல்.வி., செலுத்து வாகனம் 2025-ம் ஆண்டு 2-வது பகுதியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் (என்.எஸ்.ஐ.எல்) வர்த்தக ரீதியிலான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்த பொது-தனியார் துறை கூட்டமைப்பு மாதிரி மூலம் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, இஸ்ரோவின் கனரக ஏவுகலமான எல்விஎம்3-ஐ இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம் மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
----
(Release ID: 2115229)
TS/SVKPG/DL
(Release ID: 2115484)
Visitor Counter : 18