சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்கள்
Posted On:
26 MAR 2025 3:20PM by PIB Chennai
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ல் சுமார் 31,130 கோடி ரூபாயிலிருந்து 2024-25ல் 3,00,019 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கான மூலதனச் செலவு 2013-14ல் சுமார் 51,000 கோடி ரூபாயிலிருந்து 2023-24ல் 3.01 லட்சம் கோடி ரூபாயாக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புத் துறை, பொருளாதாரத்தின் முதன்மை உந்துசக்தியாக இருப்பதுடன், விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் பங்களிக்கிறது.
சத்தீஸ்கர், உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட நாட்டின் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் நீளம் 2014 மார்ச் மாதத்தில் 91,287 கிலோ மீட்டரிலிருந்து தற்போது 1,46,204 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டினால் சாலைகளின் தரம் கணிசமாக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 18,371 கி.மீ ஆக இருந்த நான்கு வழித்தட மற்றும் அதற்கு மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2.5 மடங்கு அதிகரித்து 48,430 கி.மீ. ஆக உள்ளது. மேலும், மொத்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பில் 2-வழித்தடத்திற்கும் குறைவான தேசிய நெடுஞ்சாலைகளின் விகிதம் 30%-லிருந்து 9%-மாக குறைந்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்த தகவலைத் தெரிவித்தார்.
***
TS/PLM/SG/KR/DL
(Release ID: 2115423)
Visitor Counter : 28